திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெங்கடேசப் பொருமாள் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோயிலின் முலவர் மற்றும் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் வெங்கடேச பெருமாள் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.
ஆண்டு தோறும் ஆடிமாதம் பெள்ர்ணமி திருவோணம் சேர்த்து வரும்நாள் அன்று சிறப்பு மஹா திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நேற்று செவ்வாய்கிழமை மஞ்சள் பொடி, திருமஞ்சனபொடி, தேன் ,பால் ,தயிர் ,இளநீர், பழவகை, பழரசம் ,சந்தனம் போன்ற திரவியகளால் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம், அர்ச்சனை மஹாதீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி சடாரி சாதித்து பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமண தடை நீங்கும்
இந்த கோயிலில் பெருமாள் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். திருமண தடை நீங்க ஜாதகத்தை சாமியின் திருவடியில்
வைத்து அர்ச்சனை செய்து வர திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பது இக்கோயிலின் நம்பிக்கை.
மேலும் லஷ்மி நாராயணரை வணங்கி வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கி ஓற்றுமையாக வாழ இந்த கோவிலில் வந்து வணங்கினால் போதும் என்பது நம்பிக்கை.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி
மாணவர்கள் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வர கல்வியில் ஏற்படும் தடை நீங்கி நல்ல ஞாபக சக்தியும் நல்ல மதிப்பெண்ணும் பெறுவார்கள். மேலும் இந்த கோவிலில் உள்ள சக்கரதாழ்வரை வழிபட்டு வர பில்லி சூன்யம் மாத்தீரீகம் பயம் தொடர்பான கோளாறு நீங்கி வாழ்வில் நிம்மதி உண்டாகும்.