கோவை போத்தனூர் போலிசார் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலிசார் முற்பட்ட போது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போத்தனூர் காவல்துறையினர் லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி நிறுத்தி உள்ளனர். பின்னர் லாரிய
சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாக சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் மனோஜை பிடித்த போலிசார், லாரியை மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், அவை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து சென்னைக்கு எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. இதில் 57 மூட்டைகளில் இருந்து 1051 கிலோ சந்தன கட்டைகள் பிடிப்பட்டுள்ளன.இது குறித்து ஓட்டுநர் மனோஜிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.