Skip to content
Home » 5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

  • by Senthil

ரஷியாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். பழங்கள், காய்களை ஜூசாகவும் குடித்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஹனா சம்சனோவா அங்கு கிடைக்கும் காய்கனிகளை உண்பது மற்றும் அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். காய்கள், பழங்கள், பயிறு, இலை போன்ற இயற்கை உணவுகளை சமைக்காமல் பச்சையாக அவர் சாப்பிட்டு வந்தார். இதனிடையே, ஹனா சம்சனோவா கடந்த சில மாதங்களாக தனது உணவு பழக்க முறையில் மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதன் காரணமாக அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார். பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஹனா சம்சனோவா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பச்சை

காய்கனிகளை தொடர்ச்சியாக சாப்பிட்டதால் உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டு ஹனா உயிரிழந்திருக்கலாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தனது மகளின் உடலை ரஷியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி ஹனாவின் தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, உயிரிழப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு ஹனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தாய்லாந்து பழ சீசனுக்காக ஆர்வமாக உள்ளேன். உடல் எடையை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்த ‘வீஹன்’ பெண் பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!