லயன்ஸ் கிளப், பாபநாசம், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்ப் பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது வரவேற்றார். மாவட்டத் தலைவர் செல்வராஜன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் லதா, அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்ற சாசனத் தலைவி தில்லை நாயகி, ராஜகிரி ஊராட்சி உறுப்பினர் முபாரக் ஹீசைன், வட்டார மருத்துவ அலுவலர் தீபக் பேசினர். மருத்துவ அலுவலர் அழகு சிலம்பரசி பேசினார். அவர் பேசும் போது 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. குழந்தை ஒப்பீடு வேண்டாம். தாய்ப் பாலில் எல்லாமே உள்ளது. கொடுக்க, கொடுக்கத் தான் தாய்ப் பால் ஊறும். ஒரு வயசு வரை பசு பால் தரக் கூடாது. பாக்கெட் ஐட்டம் தேவையில்லை.
தாய்மார்களுக்கு ஆரோக்கியமான எந்த உணவும் தள்ளுபடி கிடையாது. அதிக புரதச் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வாரத்தில் 3 நாள் கீரைகள் எடுக்க வேண்டும். தினமும் பயறு வகை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் லயன்ஸ் மாவட்டத் தலைவர் சம்பந்தம், பொருளாளர் ஜோதி, முன்னாள் தலைவர்கள் பிரபாகரன், கணேசன், பாண்டியன், சிக்கந்தர், செவிலியர்கள், கிராமச் சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர் உட்பட தாய்மார்கள் கலந்துக் கொண்டனர். செயலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.