வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வங்க கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் ஆள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல
வேண்டாம் என்பதை எச்சரிக்கும் விதத்தில், நாகை காரைக்கால் கடலூர் சென்னை எண்ணூர் பாம்பன் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இன்று 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தரைக்காற்றும், கடல் காற்றும் வேகமாக வீசும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.