Skip to content

மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.   தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தன. மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தொழிலாளர்கள் இன்று அதிகாலை வேலை செய்து கொண்டிருந்தபோது கிரேன் எந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நடந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சமும், மத்திய அரசு ரூ.2 லட்சமும்   நிவாரணம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *