Skip to content
Home » குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக காற்றின் காரணமாக மளமளவென பற்றிய தீயானது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேலான டேங்கர் லாரிகள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடுமையாக பற்றி எரியும் தீயை இரவு முழுவதும் போராடி ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நள்ளிரவு சுமார் 3 மணிக்கு மேல் பாதுகாப்பு காரணங்களுக்காக தீயை அணைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து இரண்டு ஹிட்டாச்சி வாகனங்கள் உதவியுடன், குப்பை மேடை கிளறி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கரூர் – வாங்கல் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நேற்று இரவு போக்குவரத்தை மாற்றிவிட்ட காவலர்கள், இன்று காலை அப்பகுதிக்கு வரவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் புகை

மண்டலத்துக்குள் புகுந்து இரண்டு பக்கமும் வெளியே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்க இரண்டாவது நாளாக கடுமையாக போராடிவரும் நிலையில், சாலைப்போக்குவரத்தை மாற்றி விடும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வராததால் வாகன ஓட்டிகள் தடுப்புகளை மீறி உள்ளே செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!