திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (67) இவர் டீ கடையில் டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார்..
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது..
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்…அவர் கொடுத்த மனுவில் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டில் வேலைக்காக சென்ற தன்னுடைய மகன் மணி காணாமல் போனதால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
சேதுராமன் மகன் மணிக்கு
சாவித்திரி என்ற மனைவியும் ஹேமஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சேதுராமனின்
மருமகள் சாவித்திரி மாற்றுத்திறனாளி என்பதால் அவர் தற்சமயம் அரியலூர்
மாவட்டத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
எனது மகனுக்கு எந்த வேலையும் கிடைக்காததால் கடந்த 2020 ஆம்
ஆண்டு மலேசியா நாட்டிற்கு கேட்டரிங் வேலைக்கு 80 ஆயிரம் ரூபாய்
செலவு செய்து மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். அங்கு அவர் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக அங்கு வேலை பார்த்த நண்பர்கள் கூறினார்கள். அவரும் எங்களுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
அங்கு அவர் கஷ்டப்படுவதாகவும் வேலை சரிவர கிடைக்காத காரணத்தினால் வறுமையில் வாடுவதாகவும் கூறினார்.
இதனால் நாங்கள் எங்கள் குடும்ப சூழ்நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி
வந்தோம். எங்களை மாதந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் எனது மகன் மணி கடந்த ஏழு மாதமாக என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
எனது மகனின் செல்போன் எண்ணையும் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அங்கு அவனுடன்
பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த நண்பர்கள் திருச்சி வந்தபோது அவர்களிடம்
கேட்டபோதா அவர்கள் அவன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிலர் அழைத்து சென்றதாகவும் கூறினார்கள்.
எனது மகன் மணி உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது எங்களுக்கு
தெரியவில்லை எனவே தன்னுடைய மகனின் நிலை குறித்து அறிந்து அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.