Skip to content
Home » நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம் உள்ளிட்ட இடங்களில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீதமுள்ள 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் தர மறுத்ததால், அதனை சிபிசிஎல் எண்ணை ஆலை நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், சிபிசிஎல் நிர்வாகத்த்தை கண்டித்தும், நிலத்தை கையகப்படுத்த குறுக்கு வழியை கையாளும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் ஏற்பட்டன. மேலும் சிட்டா அடங்கல் வழங்காமல் விவசாயிகளை இவ்வாண்டு விவசாயம் செய்யவிடாமல் வஞ்சிப்பதாக குற்றம் சாட்டிய, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், விற்பனை செய்யப்படாமல் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு உரிய விலை தந்தால் மட்டுமே அதனை சிபிசிஎல் ஆலைக்கு விற்பனை செய்வோம் என்றும், இல்லையெனில் நிலம் கையகப்படுத்த குறுக்கு வழியை கையாளும் பனங்குடி சிபிசிஎல் எண்ணை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தை வரும் நான்காம் தேதி நடத்த போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!