திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான் 2016ல் திருவெறும்பூர் பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள். பெயர் தான் அவருக்கு சப்பாணி, ஆனால் அவர் நடத்திய கொலைகள் 8. ஆள் ஆஜானுபாகுவான தோற்றமுடையவர் அல்ல. அப்பாவி நோஞ்சான் போலத்தான் இருப்பார். 35 வயதான, வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிய இவர், அரை பவுன், ஒரு பவுன் நகைகளுக்கெல்லாம் சர்வசாதாரணமாக கொலை செய்தவர். திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர்.
இவரது தம்பி விபத்தில் இறந்து விட்டதால், தம்பி மனைவியுடன் குடும்பம் நடத்தியவர். நாளடைவில் தம்பி மனைவியையும் தன் மனைவியாக மாற்றிக்கொண்டு அவரை விபசாரத்தில் தள்ளினார்.
இந்த நிலையில் தான் திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன் மற்றும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி இவர்களின் உறவினர் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் முத்தையாதேவன் மகன் தங்கதுரை(35) இவர் திருச்சி தஞ்சை ரயில்வே இருவழிபாதை மேற்பார்வை அதிகாரிக்கு கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். தங்கதுரை திடீரென மாயமானார்.
இந்தநிலையில் வாழவந்தான்கோட்டை அருகே உள்ள கல்குவாரி பகுதியில் உள்ள முட்புதர் பகுதியில் மூன்று நாட்களாக ஒரு ஸ்கூட்டி நிற்பதாக துவாக்குடி போலீசாருக்கு சில நாட்கள் கழித்து தகவல் கிடைத்தது .துவாக்குடி போலீசார் அந்த ஸ்கூட்டியை பறிமுதல் செய்து விசாரணை செய்தபோது அது தங்கதுரை மனைவி வினோதினிக்கு சொந்தமானது என்று தெரியவந்தது
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வினோதினியிடம் விசாரணை செய்தப்போது தங்கதுரை அந்த ஸ்கூட்டியை எடுத்து சென்றதாகவும் அதிலிருந்து தங்கதுரையை காணவில்லை என்று தெரியவந்தது இந்நிலையில் வினோதினி தங்கதுரை காணாமல் போனது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வந்தனர் இந்நிலையில் கிருஷ்ணசமுத்திரம் பாசன வாய்க்காலில் ஒருவரை கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அந்த உடலை தோண்டி எடுத்தப்போது அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது மேலும் கை கால்கள் ; கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இருந்தது அதன் அடிப்படையில் அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அது தங்கதுரை உடல் என கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கதுரையை யார் கொலை செய்து புதைத்தார்கள் என போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவக்கினர். தங்கதுரை செல்போன் மூலம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது தங்கதுரையுடன், கிருஷ்ணசமுத்திரம் சப்பாணி(35) கடைசியாக பேசி இருந்தார். எனவே சப்பாணியை பிடித்து விசாரித்தனர். அப்போது சப்பாணி கூறியதாவது:
தங்கதுரை எனது பள்ளி நண்பன். நான் வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்தனர். எனக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். என் மனைவி பலருடன் தொடர்பு வைத்திருந்தாள். பின்னர் என்னை விட்டு போய் விட்டார். தங்கதுரையிடம் இருந்த நகைக்காக அவரை என் வீட்டில் நகைகள் இருக்கிறது. அதை வாங்கிச்சென்று கடையில் விற்றுக்கொடு என அழைத்து சென்று வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்க மது வாங்கி கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்தேன்.
இப்படியாக 8 பேரை கொன்றேன் என வாக்குமூலம் கொடுத்தான். அதன் அடிப்படையில் சப்பாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபு இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சப்பாணி இன்று பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். கடைசி நேரத்தில் தீர்ப்பு வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.