Skip to content
Home » திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

* பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரெயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் ஆகிய  முன்பதிவு இல்லாத ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிஉள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. * திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும். * சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *