கரூர் மாநகர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், சந்தனம், கரும்புச்சாறு, திருநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சாற்றி, தாமரை, மல்லிகைப்பூ, ரோஜா பூ உள்ளிட்ட பல்வேறு மலர்களான மாலைகளைக் கொண்டு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.