திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாத நிலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. தெருவில் இருக்கும் நாய்களால் மயிலுக்கு ஆபத்து நேர்ந்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் அங்குள்ள இளைஞர்கள் மயிலை காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரவு நேரம் என்று கூட பாராமல் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். இளைஞர்கள் அனைவரும் மயிலை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.ஊர் பொதுமக்கள் இளைஞர்களையும் இரவு நேரமாக இருந்தாலும் துரிதமாக விரைந்து வந்து மயிலை பெற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேஷ் மற்றும் சஞ்சய் அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.