Skip to content
Home » திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜனாப் M முஹம்மது சபீக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகளான திருச்சி மாவட்ட பொருளாளர் ஜனாப் R ஐனுல்லா மகுது MBA., திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் திரு A புகழ். திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜனாப் 5 ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜனாப் R ஷேக் அப்துல்லாஹ் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் அ சாதிக் பாட்சா பாவா மாபெரும் கண்டன பேருரை ஆற்றினார்.

400 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய மக்களின் அடையாளமாக இருக்கக்கூடிய தமிழ்நாடு வாரியத்திற்கு கட்டுப்பட்ட அனர்பாக் தர்கா & கபரஸ்தான் ஐ சற்று விரோதமாக இடிக்க குற்றவாளிகளுக்கு ஆளு அரசின் பிரதிநிதிகளும், காவல்துறையும் துணை நிற்பது வேதனை அளிக்கிறது. அரசியல் தலையீடு இன்றி மதக்கலவரம் செய்ய

முயற்சிக்கும் குற்றவாளிகள் மீதும், இந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த நினைக்கும் குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மேலும் அரசு சார்பில் இந்த புனித ஸ்தலத்தை கற்றுத் தர வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். மேலும் மத்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது தொடுத்த நில அரசியலுக்கான அடக்குமறையை இன்று மணிப்பூர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் மக்கள் மீது தொடுப்பது அநீதியின் உச்சம். மணிப்பூரின் இந்நிலையை மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட , கூக்கி சமூக மக்கள் அதே இடத்தில் நிம்மதியாக வாழ அரசு வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட, வட்ட மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *