Skip to content

பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம் ஆண்டு அவரை பிரிந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில் அவரையும் பிரிந்தார். இந்நிலையில் ஹல்க் ஹோகன் 45 வயதான யோகா பயிற்சியாளரான ஸ்கைடெய்லி என்பவரை 3-வதாக திருமணம் செய்திருக்கிறார்.  அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைப்பார்த்த ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!