திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது இந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் வட்டித் தருவதாக கூறியதை அடுத்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில் திடீரென நிறுவனம் பூட்டப்பட்டதால் இது குறித்து முதலீட்டாளர்கள் காஜாமலையில் உள்ள திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இயக்குனர் ராஜா மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் வெளிவந்து பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி காஜாமாலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட சென்றார்.
அலுவலகத்தில் கையெழுத்திட்ட ரமேஷ்குமார் மீண்டும் கீழே வரவில்லை உடன் சென்றவர்கள் நீண்ட நேரம் ஆகியும் ரமேஷ் குமார் கீழே வராததால் மேலே சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் கடத்தப்பட்டாரா அல்லது பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வேறு வழக்கின் கீழ் காவல்துறையிரால் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் காரைக்கால் காவல்துறையினர் அவரை மேலே உள்ள அலுவலகத்திலேயே கைது செய்து மற்றொரு வழியாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.