நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு தொண்டர்களும் குவிந்து உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
வன்முறை குறித்து பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது: போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது. போலீஸ் தான் இந்த வன்முறைக்கு காரணம். அவர்கள் தான் பாமகவினரை தாக்கினர்.என்எல்சியின் அத்துமீறிய செயலை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்? இந்த மண்ணையும், மக்களையும் அழித்து விட்டு மின்சாரம் எடுக்க வேண்டாம். நிலம் கையகப்படுத்துவதை உடனே நிறுத்துங்கள். நெய்வேலி சுரங்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் போய்விட்டது. தமிழகத்திற்கு என்எல்சி தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாமக போராட்டத்தால் நெய்வேலியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன. சில தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. கடலூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.