மயிலாடுதுறை அருகே அருள்மொழித் தேவன் ஊராட்சி உக்கடை பகுதியில் மின்சார வசதி இல்லாமல் போராட்டம் செய்தனர். இதனைதொடர்ந்து டிரான்ஸ் பார்மரை வைப்பதற்கு தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து புகாரும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்காததால் உரிய மின்சார வசதியின்றி குடிநீர் வசதி இல்லாமல் தவிப்பதாக கிராம மக்கள் நீடூர்
கடைவீதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை செய்தனர். இதனால் அப்பகுதியில் மணல்மேடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.