தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7 பேரை கொன்றும் மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விடப்பட்டது..ஆனால் வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி,சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
மக்களை அச்சுறுத்தி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறையினர் மக்னா யானையை பிடிப்பதற்காக டாப் ஸ்லிப் கோழிகமுத்தி முகாமிலிருந்து மூன்று கும்கி யானைகளை வரவளிக்கபட்டு சரளப்பதியில் வெறும் காட்சி பொருளாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் கும்கி யானைகளை சில மாதங்களாக நிறுத்தி வைத்து மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம்
காட்டுவதாகவும் தங்களை வனத்துறையினர் ஏமற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையிடம் கேட்டால் வனத்துறையினர் சரியான பதில் அளிக்காமல் சாக்குப் போக்கு சொல்லி காலம் கடத்துவதாகவும், எனவே இப்பகுதி மக்கள் உயிர் பலி ஆவதற்கு முன்பே மக்னா யானை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் கிராம மக்களை சமாளிப்பதற்காக கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானைகளையும் கட்டி வைத்து கஷ்டப்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த மக்ன யானையை பிடிக்க வனத்துறையினர் வெறும் கண்துடைப்புக்காக மெத்தனம் காட்டி வருவதாகவும் இந்த சரளபதிப்பகுதியில் மூன்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தங்கி உள்ளதாகவும் அவர்கள் உடனடியாக தற்போது கும்கி யானைகள் மூன்றையும் அழைத்துக் கொண்டு வனத்துறையினரும் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர்..