கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாதாந்திர மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும், திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேறும்படி கூறினார். அதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலக கதவுகள் மூடப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி மாநகராட்சி மேயருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாயும், துணை மேயருக்கு 15 ஆயிரம் ரூபாயும், மாமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் மதிப்பூதியம் இன்று வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து மேயர் கவிதா கணேசன் தீர்மானம் நிறைவேற்றினார். முதல் மாத சம்பளம் பெற்றதும் மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.