Skip to content
Home » மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல்….

மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல்….

  • by Authour

அமலாக்குத்துறை சோதனை நியாயமா இல்லையா என்று சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பை அளிக்கும் – திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திருச்சியில் பேட்டி …

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் – அப்போது பேசிய அவர் :

மணிப்பூர் பிரச்சனை நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது – மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே அண்ணாமலை தற்போது தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் என்கிற பெயரில் ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார்.

Specific charge எதாவது அண்ணாமலை சொல்லி இருக்கிறாரா ? அப்படி எதுவும் இல்லை – அவர் என்ன புகார் கொடுத்தார் என யாருக்கும் தெரியாது.

திசை திருப்புவதற்காக தான் அண்ணாமலை இது போன்ற புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார் – முகாந்திரம் இல்லாத அவர் புகாரை எப்படி ஏற்றுக்கொள்வது.

எதையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயார் – திமுகவினர் மீது போட்ட அனைத்து வழக்கையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம்.

2500 கோடிக்கு பினாமி அண்ணாமலை என்று நான் கூட சொல்லலாம் –
ஆனால் அதனை நாம் நிரூபிக்க வேண்டும்.

மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே அண்ணாமலை இப்படி ஒரு விஷயத்தை செய்தல்ளார்.

ED ரைடே நியாயாமா இல்லையா என்று சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்படுகிறது ? எனவே நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும்.

இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை என்பார்களே தவிர ? கண்டிப்பாக இதனால் திமுகவிற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.

அண்ணாமலை ஒரு empty vessel –
காலி பாத்திரம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *