கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “பெண் குழந்தைகளை காப்போம்”” “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவியர்கள் மட்டும் பங்கு
பெற்றனர். இன்று நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திண்டுக்கல் ரோடு அரசு கலைக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மினி மாரத்தான் போட்டியை நிறைவு செய்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் அளவில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது