திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு சென்னைக்கு செல்லும் வழியில் நடிகையும் அமைச்சருமான ரோஜா விடுத்த அழைப்பை ஏற்று நகரியில் உள்ள அவரது வீட்டிற்கு ரம்யா கிருஷ்ணன் சென்றார். அவரை அமைச்சர் ரோஜா மற்றும் அவரது கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி சால்வை அணிவித்தும், பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது ரம்யா கிருஷ்ணன் வருகையை அறிந்த
அவரது ரசிகர்கள் பலரும் சால்வை அணித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ரோஜா இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். நீண்ட கால் நட்பை கொண்டுள்ள இருவரும் சந்தித்து சில மணி நேரம் பேசி கொண்டனர். பின்னர் அமைச்சர் ரோஜா பெருமாள் படத்தை நினைவு பரிசாக வழங்கி வழி அனுப்பி வைத்தார்.