Skip to content

குளித்தலை அருகே 17 வயது சிறுமி பலாத்காரம்…தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் தாலுக்கா செம்பியநத்தம் ஊராட்சி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் குணா என்கிற ரெங்கசாமி (30). இவர் கரூரில் பனியன் பிரிண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 7 மாதத்திற்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூரில் வளையல் கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியுடன் குணா செல்போன் மூலம் நான்கு நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்த சிறுமியிடம், வீட்டில் இறக்கி விடுகிறேன் என கூறி சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற குணா தட்டம்பாறை பகுதியில் வலுக்கட்டாயமாக அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி தனது பெற்றோரிடம் கூறாமல் மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பிறகு கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே மருத்துவர்கள் விசாரணை செய்ததில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கடந்த 03 ஆம் தேதி குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த குணாவை தேடி வந்துள்ளனர்.

அதனையடுத்து குணாவை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!