திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பட்டி ஒன்றியம் திண்ணக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்.மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திண்ணக்குளம் ஊராட்சியில் இன்று
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மரத்திலிருந்த கதண்டு 100 பணியாளர்களை கடித்து தாக்கியது.இதில் 9 பெண்கள், 16
ஆண்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு தனியார் வாகனம் மூலம் புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் ஹரிராம்,செவிலியர் வளர்மதி, மருத்துவர் பவித்ரா மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 பேரை கதண்டு கடித்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.