சீனாவை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவில் 5 பேருக்கு இது பரவி உள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கர்நாடக மக்கள், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், திருப்பதி தேவஸ்தானமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இனி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.