Skip to content
Home » திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி வணிகவியல் அசோசியேசன் தொடக்க விழா

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி வணிகவியல் அசோசியேசன் தொடக்க விழா

திருச்சி ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை அசோசியேசன் தொடக்க விழா நடந்தது.   பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நீவாணி  இதில் சிறப்பு அழைப்பராக கலந்து கொண்டார்.

முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நீவாணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

நீங்கள் என்னவாக வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.நம் வாழ்வில் 50 சதவீதம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் – அதே போல் 50 சதவீதம் நமது சுய ஒழுக்கம் மிகவும் அவசியம்.

சுய கட்டுப்பாடு இல்லாமல் எதையும் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை,தைரியம் மட்டும் போதாது.குறிப்பாக இந்த வயது, மனம் அலைபாயக் கூடிய வயது. எனவே தன்னடக்கம் என்பது மிகவும் அவசியமானது.தவறுகள் இல்லாமல் யாரும் அனுபவத்தை கற்றுக் கொள்ள முடியாது .எனவே தவறுகளை திருத்திக் கொள்வதே மிகவும் சரியானது.

உங்களது இலக்கு எதுவானலும் நீங்கள் அதனை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் கவலை படாதீர்கள் அதனை விட சிறந்த ஒரு இடம் உங்களுக்காக காத்திருக்கிறது என்பதை நம்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *