கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கம் இணைந்து நடத்திய நர்சிங் மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி உள்ளிட்ட நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சிறப்புரையாற்றிய இறையன்பு, கொரோனா சமயத்தில் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய மருத்துவர் களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை காணிக்கையாக்குகிறேன் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய மருந்துகள் சில
நேரத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவ்வாறு ஒவ்வாமை ஏற்படாமல் இருப்பதை கண்டறிந்து உரிய மருந்துகளை வழங்க வேண்டும் எனவே மருத்துவர்கள் சிறந்தவர்களாகவும் கருணை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்
திருவள்ளுவர் உழைச்செல்வான் என்று ஒரு குறலை கூறுகிறார். செவிலியர்களாகிய நீங்கள் தான் திருவள்ளுவர் குறிப்பிடும் அந்த உழைச்செல்வான். சில செவிலியர்கள் நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை மருத்துவர்கள் சொல்வதற்கு முன்பாகவே தெரிந்து கொண்டு, அதற்கான மருத்துவத்தையும் தெரிந்து வைத்துள்ளார்கள். இருந்தாலும் மருத்துவர்கள் வந்து கூறிய பிறகு தான், மருந்துகளை வழங்குகிறார்கள். இது படிப்பினால் மட்டும்தான் வருகிறது என்றார்.