கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ்
அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரில் இருவர் அந்த வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகி இருந்தது. பதிவான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவங்கள் மாநகரில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.