தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பல திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்றிரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரில் நாளை மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.