பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள சாய்வுத்தள பகுதியில் இருசக்கர வாகனங்கள் வந்து நிறுத்தப்படுவதால் அந்தவழியாக வர முடியாமல், படிக்கட்டு வழியாக
மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலர் உள்ளே வர வேண்டி உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.