Skip to content
Home » மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

  • by Senthil

சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டிகுடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.  கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி  அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ,குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை  ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000  நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது.

இந்த திட்டங்களை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர். அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன.

இதில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை)  காலை 10 மணிக்கு தொடங்கிவைக்கிறார். மைல் கல் அதன் பின்னர், முகாம் தொடங்கி வைக்கும் பள்ளிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் மூலம் சென்று, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி செல்கிறார். விழா முடிந்ததும், மீண்டும் சென்னை திரும்புகிறார். இந்த திட்டத்தை மகளிரின் விலைமதிப்பில்லா பங்களிப்புக்கான சமூக அங்கீகாரம் என்றும், சுயமரியாதை பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!