கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதந்திர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றதுநகராட்சி தலைவர் மெஹரீபாபர்வின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 33கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதிமுக கவுன்சிலர்கள் வார்டு பிரச்சனை சம்பந்தமாக குறைகளை பேசினர். டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை செய்யவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.
இதனை கண்ட நகராட்சி ஆணையாளர் வினோத் உடனடியாக நகராட்சி கூட்ட அரங்கினை மூட உத்தரவிட்டார். இதையடுத்து கதவுகள் ஜன்னல்கள் என அனைத்தும் மூடப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செய்தியாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளரிடம் வாக்கு வாதம் செய்ததால் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் இருவரும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கூட்ட அரங்கில் இருந்து ஆல்பாஸ் சொல்லிவிட்டு வெளியேறினர்.
இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி மன்றம் அரங்கு முன்பு செய்தியாளரை அனுமதிக்க மறுத்த ஆணையாளரை கண்டித்தும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.