தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள்(87) இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். உணவு ஒவ்வாமை காரணமாக தயாளு அம்மாளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..