நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் காமெடியில் உருவாகி வரும் இந்த படத்தை பிரேமானந்த் என்பவர் இயக்கி வருகிறார். ஆர்கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சந்தானம், சமீபகாலங்களில் நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லை என்று சொன்னார்கள். ஆனால் டிடி ரிட்டர்ன்ஸ் படம் முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும். தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களும் வெற்றிப் பெற்றன. அதேபோல இந்த படமும் மக்களின் மனங்களை கவரும்.
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும், ஒரு மாதிரியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.