திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் பேரூராட்சியில் இன்று சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்து பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை கழிவுகளை கையாளுவதை பார்வையிட்டார், மேலும் பேரூராட்சி வளம்மீட்பு பூங்காவில் தூய்மை இந்தியா திட்டம் 2.0இன் கீழ் கட்டப்பட்டு வரும் ஈரக்கழிவு மேலாண்மை கட்டிடத்தினை பார்வையிட்டார்.
மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்ட மின்கல வாகனத்தை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மை பணிகளை செயல்படுத்திட அறிவுரை வழங்கினார். 2021-2022ஆம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற
மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.301.00 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். இப்பணியினை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் விரைந்து முடித்திட அறிவுரை வழங்கினார்.
மேற்படி ஆய்வில் செயற்பொறியாளர் கருப்பையா, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் காளியப்பன், திருச்சி மாவட்ட உதவி செயற்பொறியாளர் திருமலைவாசன் புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.