தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.