Skip to content

திருவையாறு அருகே கிரேன் மோதி கூலி தொழிலாளி பலி… தந்தையை இழந்து தவிக்கும் 4 மகள்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கூத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 45,. மருவூர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்,55, இருவரும் கூலி தொழிலாளிகள்.

இந்நிலையில் நேற்று வேலையை முடித்து, பழனிசாமி, கமல்ராஜ் இருவரும் மருவூர் நோக்கி டூ வீலரில் சென்றனர்.

சாத்துனுாரில், கமல்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, டூ வீலருடன் பழனிசாமியை சாலையோரத்திற்கு நிற்க வைத்து விட்டு அங்கிருந்த பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது மருவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்துக்கொண்டிருந்த, கிரேன் எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பழனிசாமி உடல் நசுங்கி இறந்தார்.

தகவலறிந்த மருவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கிரேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இறந்த பழனிசாமிக்கு சித்ரா என்ற மனைவியும், பவித்ரா, சாதனா, சிவன்யா, மோனிஷா என்ற நான்கு மகளும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!