தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மாண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது.
திருச்சிக்கு வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் பயணமாக முதல்வர் வரவுள்ளார். இவர் ஒருநாள் பாசறைக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புறையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில், அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்திய, வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவடட்ங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் இந்த மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனையொட்டி திருச்சி ராம்ஜிநகர், பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் விழா மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று விழாவிற்கான ஏற்பாடு பணிகளை அமைச்சர்
கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரியில் விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ள இடத்தையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
வருகின்ற 26 ஆம் தேதி காலை 11மணிக்கு சென்னையிலிருந்து தமிழக முதல்வர் விமான மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
அதனைத் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க மூத்த வழக்கறிஞர்கள் முதல்வரை சந்திக்க உள்ளனர்.
மாலை 4 மணிக்கு 15 மாவட்டங்களை சேர்ந்த இரண்டாம் நிலை தேர்தல் பூத் கமிட்டி அலுவலர்களுடன் கலந்துரையாடி இறுதியாக உரையாற்ற உள்ளார்.
27 ஆம் தேதி காலை 9 மணிக்கு விவசாயிகளுக்கான, வேளாண் சங்கமம் என்ற தலைமப்பிலான மாநிலம் அளவிலான கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் இன்றைய நவீன காலகட்டத்தில் எப்படி விவசாய உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவது என்பது குறித்த பல்வேறு உபகரண கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நடத்திய கண்காட்சி முதல் முறையாக தமிழக அரசு முன் நின்று இந்த விவசாய உபகரணங்கள் கண்காட்சியினை நடத்துகிறது.
மேலும் இந்த உபகரணங்களை கொண்டு எப்படி விவசாயத்தை மேம்படுத்தலாம் என்பது குறித்தும் தமிழக முதல்வர் விவசாயிகளுடன் கலந்துரையாடி சிறப்புறையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து அன்று மாலை தமிழக முதல்வர் மீண்டும் திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு புறப்படுகிறார் என கூறினார்..
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் அன்பழகன் , மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், ராமதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்..