பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுமாமி திருக்கல்யாணம் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் பாரதம் படிக்கும் நிகழ்வும் நடைப்பெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி
ஜுலை 21 ம் தேதி காலை நடந்தது. ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாண விழாவில் இக்கோயிலை சீரமைத்து மகா கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கு காரணமாக இருந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உட்பட ஆயிரம் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.