இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15% டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.