தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாவட்டத்தில் நேற்று மாலை பொழுதில், நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது வெடிப்பு ஏற்படக்கூடும் என்று சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்
காயமடைந்தவர்கள் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்த முதற்கட்ட விசாரணையில் எரிவாயு வெடிப்புக்கான காரணம் என்னெவென்று கண்டறியப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.