Skip to content

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ

முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் இரத்த பரிசோதனைகள், ECG, ECO, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, எலும்பு சார்ந்த பரிசோதனைகள், பொது மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பதிவும் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!