புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரிவயல் கிராமத்தில் உ்ளள அங்கன்வாடி மையத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து புதுகை, ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வைப்பறை கூடிய சமையலறை கூடத்தின் கட்டுமானப் பணியினை, கலெக்டர் மெர்சி ரம்யா நேரில்
பார்வையிட்டார்.உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஜெஸ்டின் ஜெயராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் பாலகிருகஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.