மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளதாவது; “மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்கவே முடியாது. இது மிகவும் கவலையளிக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், சுப்ரீம் கோர்ட்டு தலையிடும். என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.