தொழில்நுட்பங்கள் மூலம் இசையுலகம் விரிவடைந்து வரும் நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை மட்டுமே வைத்து தாளம் தட்டி சினிமா பாடல்களை பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார் கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவர் கடந்த மூன்று மாதங்களாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை கவரும் வகையில் பிளாஸ்டிக் குடத்தில் மேளம் அடித்து சினிமா பாடல்களை பாடி பயணிகளின்
கவனத்தை ஈர்த்து வருகிறார். பேருந்திற்கு நீண்டநேரம் காத்திருக்கும் பயணிகள் இவருடைய சொந்த தாளத்தில் சினிமா பாடல்கள் பாடுவதை அமர்ந்து ரசிக்கின்றனர். மேலும் பாடலை கேட்கும் பயணிகள் தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றனர். பார்வை குறைபாடு இருப்பதால் வேலைக்கு செல்லமுடியாத நிலையில் பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கின்ற காரணத்தால் நாகை திருவாரூர், காரைக்கால், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் பாடல்களை பாடி குடும்பத்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.