அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா. இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குடிபோதையில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை சுமார் 4 மணி நேரம் மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். அந்த பகுதியை முக்கியஸ்தர்கள் அவரை கீழே இறங்கச் சொல்லி பல மணி நேரம் போராடியும் கீழே இறங்காததால்.
ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ
இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறக்கி உள்ளனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.