பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறைக்கலாம்.இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை, அமலாக்கத்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்றார். இந்த நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, தமிழ்நாட்டில் பிரதமர் ஆவதற்கு யாருக்கும் தகுதி இல்லை என அமித்ஷாவுக்கு பதில் அளித்து உள்ளார் என பாஜக நிர்வாகிகள் கூறினர்.