தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பொதுக்கணக்கு குழுவினர் அதன் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.எ. தலைமையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் வந்தனர். வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய சென்ற அந்த குழுவினர் விரிவாக்க மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, பொதுக்கணக்குக்குழு உறுப்பினர்கள் காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா , கலெக்டர் லலிதா, பூம்புகார், எம்.எல்.ஏ., நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார் , வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.