கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான நேற்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். , அதன்படி நேற்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
தேங்காய்யின் கண்களில் துளையிட்டு, அதன் வழியாக கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் என 5 வகையான பூரணங்களை போட்டு அந்த தேங்காவை தீயில் சுட்டு அதை அப்பகுதியில் உள்ள அம்மன்,விநாயகர் மற்றும் இஷ்ட தேவதைகளுக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.
நோய் நொடி இன்றி மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், ஆடி மாதத்தில் இருந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மனித சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டும் எனவும் அம்மனை வேண்டி இந்த தேங்காய் சுடும் வைபம் நடத்தப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.